புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி உயிரிழப்பு

0
134

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடற்படையின் வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒன்பது வயது மாணவியே விபத்தில் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.