யாழில் காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்

0
86

கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கென தெரிவித்து, யாழ். ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்தது.

இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்னர்.

இதனையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் எமது மக்களது காணி, நிலங்களில் பல படையினரிடமிருந்து இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், மேலும் எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் பல்வேறு தேவைகளுக்கு என சுவீகரிப்பது நியாயமற்ற செயற்பாடாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மேற்படி காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வரும் வரையில் இந்த காணி அளவீட்டை மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.