கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் போதும் கர்ப்பப்பை சுத்தமாகிவிடும்

0
174
கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். மாதவிலக்கு பிரச்னைகள் இருந்தாலோ, பி.சி.ஓ.டி எனும் கருப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியை தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துசாப்பிட்டு வர, கருப்பை தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.
குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம். இதனால் குழந்தை பெற்ற பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட புண் ஆறும். ரணங்கள் மறையும்.

கருஞ்சீரகம் உடல் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. மழை மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள தைமோக்யூனோன் எனும் வேதிப்பொருள், செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்ச்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றிற்கு மருந்தாக அமைகிறது.