அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர் விளக்கமறியலில்

0
94

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினரான ஆத்மா பிரியதர்ஷன என்ற மாணவரை விளக்கமறியலில் வைக்க ​கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆத்மா பிரியதர்ஷன உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் 06 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஆத்மா பிரியதர்ஷன இரண்டு வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்து செய்த கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.