ஊவா மாகாணக் கல்வி அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியம்

0
81

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழந்தாளிட செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஊவா மாகாணக் கல்வி அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

சுமார் 12 மணித்தியாலங்களாக அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா மாகாணக் கல்வி செயலாளர் சந்தியா அம்பனவல , மாகாணக் கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சபை ஊழியர்கள் மூவரும் நேற்று (25) முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

காலை 8.30 க்கு ஆரம்பமான விசாரணைகள் நேற்று மாலை நிறைவடைந்துள்ளன.

பாடசாலை அதிபர், அதிபர் ஆசிரியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின், கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா இரண்டு இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.