வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்வது தடை

0
115

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் எவரும் கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குப் பதவின் போது வாக்குப் பதிவு அட்டையை கையடக்கத் தொலைபேசியில் போட்டோ பிரதி செய்து சமூக ஊடகமொன்றில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் முதலில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.