விக்டர் ரட்நாயக்கவின் மனைவியினது விளக்கமறியல் காலம் நீடிப்பு

0
79

பிரபல பாடகர் விக்டர் ரட்நாயக்கவின் மனைவியான ஹசினி அமேந்ராவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தங்க ஆபரண மோசடிச் சம்பவமொன்று ஹசினி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தங்காலை நீதிமன்றம் ஹசினியின் விளக்கமறியல் காலத்தை நீடித்துள்ளது.

ஹசினி இன்று தங்காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு பதில் நீதவான் விதுர வீரக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் தங்காலை பகுதியில் அமைந்துள்ள அரசாங்க வங்கியொன்றில் கடமையாற்றி வந்த ஹசினி, வாடிக்கையாளர்களினால் அடகு வைக்கப்டப்ட சுமார் பதின்மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.