அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகம் மீது தீ வைப்பு

0
106

காத்தான்குடியிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகமொன்றின் மீது தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி நகரசபை தேர்தலில் 7ஆம் வட்டாரத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ரீ.எல்.ஜௌபர்கான் என்பவருடைய அலுவலகமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திற்கு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் அலுவலகத்திற்குள் இருந்த கணினி இயந்திரம் உட்பட பல தளபாடங்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கபே அமைப்பின் தலைமையலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.