இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

0
104

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனத்திற்கு நேற்று இரவு 8.00 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக ஹட்டன் சித்திரவத்தை தோட்ட பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதே இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அவர் பயணித்த காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன், வேட்பாளரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.