யாழ். சந்தை அருகே மோதல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் கைது

0
100

யாழ். மாநகர சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முத்துக்குமார் உதயசிறி கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள முத்துக்குமார் உதயசிறி உள்ளிட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரிலுள்ள சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவதற்கு சென்ற போது மாநகர சபை வேட்பாளர் முத்துக்குமார் உதயசிறிக்கும் ஏனைய சிலருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து வேட்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முத்துக்குமார் உதயசிறி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ். தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.