வௌிநாடுகளில் கடனாகப் பெற்ற 10 ட்ரில்லியன் ரூபாவில் 1 ட்ரில்லியனுக்கே ஆவணங்கள் காணப்படுகின்றன!

0
95

கடந்த 10 வருடத்திற்குள் வௌிநாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட 10 ட்ரில்லியன் நிதி செலவு செய்யப்பட்டதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

10 ட்ரில்லியன் நிதி கடனாகப் பெறப்பட்டபோதும் தற்போது 1 ட்ரில்லியன் நிதிக்கான சொத்துக்களுக்கு மாத்திரமே ஆவணங்கள் காணப்படுவதாக  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று முற்பகல் ஊடக பிரதானிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தெரிவித்ததாவது,

வௌிநாடுகளில் இருந்து கிடைத்த இந்த 10 ட்ரில்லியன் ரூபாவும் எந்தவொரு வகையிலாவது நாட்டில் இருக்க வேண்டும். அபிவிருத்திக்கென நிலையான மற்றும் நிலையற்ற சொத்துக்களை கொள்வனவு செய்தமை குறித்து நிதி அமைச்சிடம் ஆவணம் காணப்பட வேண்டும். எனினும், ஆச்சரியமூட்டும் வகையில் 1 ட்ரில்லியன் ரூபா நிதிக்கான ஆவணங்களே காணப்படுகின்றன. அந்தப் பணத்தை செலவிட்ட விதத்தைக் காண்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது. கடந்த 50, 60 வருடங்களாக அரசிற்கு நேரடியாகக் கிடைத்த வருமானம் எவ்வித அனுமதியுமின்றி கடந்த 3 வருடங்களில் தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் நெருங்கி செயலாற்றும் சிலரின் இலாபத்தைக் கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானம் குறைய இதுவொரு காரணமாக அமைந்துள்ளது.