அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள்: அனுஷ்காவின் பதில் என்ன?

0
110

ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து நெத்தியடியான பதிலை அனுஷ்கா தெரிவித்துள்ளார். சினிமா சார்ந்து எந்தவொரு பிரச்னை வந்தாலும், உடனே ஹீரோக்கள் சம்பளம் பற்றிய விஷயமும் முக்கிய விஷயமாக பேசப்படும். ‘ஹீரோக்கள் சம்பளத்தைக் குறைத்தாலே எல்லாம் சரியாகிவிடும்’ என்ற பேச்சுக்கள் எழத் தொடங்கிவிடும்.

இந்நிலையில், ஹீரோக்களின் சம்பளம் குறித்து அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது. ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது சரிதான். ஒரு படத்தில் கடுமையான உழைப்பைக் கொட்டி அவர்கள் நடிக்கிறார்கள். ஒரு படம் தோற்றாலும், ஜெயித்தாலும் அவர்கள் பேரைத்தான் குறிப்பிடுகிறோம். எனவே, அதிக சம்பளம் கொடுப்பது சரியே எனத் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.