அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் அரசாங்க அமைச்சர்

0
98

பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும சுகயீனம் காரணமாக அரசாங்க வைத்தியாசலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வரலாற்றின் அரசியலில் மக்களின் செயல்வீரன் எனவும், ஏழைகைளின் தோழன் என்றும், அனைத்து இன மக்களின் பாசத்திற்குரிய அரசியல்வாதியாகவும் இவர் சமூகத்தில் பார்க்கப்படுகின்றார்.

மேலும், வசதி மற்றும் அமைச்சுப்பதவி என அனைத்தும் இருந்தும் அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று சாதாரண மக்கள் போல இவர் சிகிச்சைப்பெறுவது மக்கள் மத்தியில் தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இவர் குணம் அடைய வேண்டுமென மக்கள் பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.