இன்று முதல் காலநிலையில் மாற்றம்

0
103

தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்யும் எனவும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடையிடையே மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், தாழமுக்கம் காரணமாக கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.