ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியுடன் ஒருவர் கைது

0
76

ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) காலை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து வந்த இந்தியர் ஒருவரிடமிருந்தே குறித்த தங்க கட்டி கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.