கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

0
109

கள்ள நோட்டுகள் வைத்திருந்த நபர் ஒருவர் பஞ்சிகாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பொலிஸ் நிலையத்தின் சட்ட அமலாக்க பிரிவிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடமிருந்து 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் 19 உம் 1000 ரூபா கள்ள நோட்டுக்கள் 6 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் 24 வயதுடைய காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் மாலிககாந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளார்.