பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

0
116

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகிய பத்ம விபூஷன் விருது இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது இசைஞானிக்கு கிடைத்துள்ளது தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு மூத்த கலைஞர்களான ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், இளையராஜாவிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் விஷால் தனது டுவிட்டரில், நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது இசையின் கடவுள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரும் பெருமை படுகிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் சிவகுமார் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது  பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை,  அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது.
பஞ்சு அருணாசலம் அவர்களால் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன்  என்பதில் பெருமை கொள்கிறேன். 50க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து, படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார் . எனது 100வது  படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘சிந்துபைரவி’ படங்களின் வெற்றியில் பெரும்பங்கு அவருடையது.
தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது. வாழ்க இசைஞானி. ஓங்குக அவர் புகழ்” என கூறப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பத்ம விருதுகள்  பெறும்
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் – உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் – உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
– என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்மவிருதுகள் கிடைத்தவர் விபரம்

இளையராஜா
ஸ்குலாம் முஸ்தாபா கான்
பரமேஸ்வரன் பரமேஸ்வரன்

பத்ம பூஷன் விருதுகள்:

பங்கஜ் அத்வானி
பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம்
மகேந்திர சிங் தோனி
அலெக்சாண்டர் காடாகின்
ராமச்சந்திரன் நாகசாமி
வேத் பிரகாஷ் நந்தா
லட்சுமண் பய்
அரவிந்த் பரிக்
ஷார்தா சின்ஹா

பத்மஸ்ரீ விருதுகள்

அபய் பேங் மற்றும் ராணி பேங்
தாமோதர் கணேஷ் பாபட்
பிரஃபுல்லா கோவிந்த பாரூஹ்
மோகன் ஸ்வரூப் பாட்டியா
சுதன்ஷூ பிவாஸ்
சாய்கோம் மீராபாய் சானு
பண்டிட் ஷ்யாம்லால் சதுர்வேதி
ஜோஸ் மா ஜோய் கான்செப்சன்
லங்கோக்லபம் சுபதானி தேவி
சோம்தேவ் தேவ்வர்மன்
யேஷி தோடன்
அரூப் குமார் தத்தா
தோத்ராங்கே கவுடா
அரவிந்த் குப்தா

மேற்கண்டவர்கள் உள்பட மொத்தம் 85 பேர்களுக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன