மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை

0
103

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை வாழ் நாள் முழுவதும் இரத்து செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிணை முறி அறிக்கை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் மாத்திரம் அல்லது பாரிய மோசடி விசாரணை அறிக்கைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய மோசடி விசாரணை அறிக்கை மற்றும் பிணை முறி அறிக்கை தொடர்பில் விவாதம் மேற்கொள்வதற்கு எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறி அறிக்கை தொடர்பிலான விவாதத்திற்கு நானோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோ அச்சமடையாதென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.