முகநூல் வாசகர் முகநூலினூடாக வேட்பாளர்களுக்கு விடுத்திருக்கும் கேள்விக்கணை

0
120
close up of hand and voting ballot

யாழ் மாநகர சபையின் வேட்பாளர்களுக்கு விடுத்திருக்கும் கேள்விக்கணை

யாழ் மாநகர சபையின் வேட்பாளர்களுக்கு,

இலங்கையின் மூன்று ஆளுகை கட்டமைப்புகளினுள் (Governance structure) ஒன்றாகிய உள்ளுராட்சி சபைகள் பிரதேச அபிவிருத்திக்கு ஆதாரமானவை.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பிரதேச அபிவிருத்திக்கு பொறுப்புவாய்ந்த சபையின் அங்கத்தவராக தாங்கள் தெரிவு செய்யப்பட்டால் தாங்கள் என்னென்ன விடயங்களில் அக்கறை கொண்டுள்ளீர்கள் என தெளிவான சிந்தனையுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளீர்கள் என வாக்காளர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுள் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் தங்களிடம் பின்வரும் விடயங்களை ஆராய விளைகின்றேன்.

 1. தங்களது சபைக்காலமாகிய நான்காண்டுகளுக்கு தங்களால் முன்வைக்கப்படும் அபிவிருத்திக்கான மகுட வாசகம் (Development Motto) என்ன?
 2. தங்களால் முன்வைக்கப்படும் நான்காண்டு அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய தூரநோக்கு (Vision), குறிக்கோள்கள் (Objectives), தந்திரோபாயங்கள் (Strategies) எவை?
 3. பிரதேச அபிவிருத்திக்கான திட்டமிடல் நடைமுறையில் மக்கள் பங்கேற்பு அணுகுமுறைகள் (Peoples’ Participatory approaches) தங்களால் கைக்கொள்ளப்படுமா அல்லது தங்களதும் தங்கள் சக உறுப்பினர்களினதும் விருப்பத் தெரிகள் (wish list) மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுமா…?
 4. பிரதேச அபிவிருத்தியில் தங்களால் ஒரு முழுமையான அணுகுமுறை (holistic approach) பேணப்படுமா அல்லது அங்கொன்று இங்கொன்றாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
 5. ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்த ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தந்திரோபாய நகர திட்டம் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன?
 6. யாழ் நகர திண்மக் கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைக்கான திட்டங்கள் என்ன?
 7. யாழ் மாநகர எல்லைக்குள் நடைபாதை அங்காடிகள் மற்றும் முக்கியமான சந்திகளிலும் மரநிழலின் கீழும் தினம்தினம் கடைவிரிக்கும் பிறபிரதேச வியாபார முயற்சிகள் தொடர்பான தங்களது நிiலைப்பாடு என்ன?
 8. யாழ்ப்பாண இராட்சியத்தின் எச்சங்களான மந்திரிமனை, யமுனா ஏரி, தோரண வாசல் என்பவற்றை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?
 9. நாளாந்தம் ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் பிரசன்னமாகும் யாழ் மாநகரசபை பகுதிக்கென தாங்கள் முன்மொழியும் எதிர்கால சனநடமாட்ட பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?
 10. யாழ் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்ள் தொடர்பாக தங்களின் நடவடிக்கைகள் எவை?
 11. யாழ் நகர திட்டமிடலின் ஆலோசனைகளைப் பெற தாங்கள் அனைத்துத் தரப்பினரையும் அழைப்பீர்களா அல்லது தங்களுக்கு சார்பானவர்களுடன் மட்டும் நிறைவேற்றிக் கொள்வீர்களா?
 12. வருடாந்த அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தயாரிப்பு பணிகளில் சபையின் சகல அங்கத்தவர்களினதும் முன்மொழிவுகள் ஜனநாயக அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டு அவசியமான முன்னுரிமை வரிசை (Priority list) தயாரிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது தங்களது வட்டாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுமா?
 13. தங்கள் கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படுமிடத்து சுமுகமாக தீர்க்க கடுமையாக பாடுபடுவீர்களா? அல்லது கடந்த தடவை பல உள்ளுராட்சி மன்றங்களில் நடைபெற்றது போல குழுக்களாகப் பிரிந்து சபையின் சுமுகமான நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படுத்துவீர்களா?
 14. மாநகர சபையின் வருமான அதிகரிப்பிற்கு தங்களின் முன்மொழிவுகள் எவை?
 15. நான்காண்டு இறுதியில் தாங்கள் மேற்கொண்ட மக்கள் சேவைக்கு மேலதிகமாக தாங்கள் அடைய எதிர்பார்க்கும் பிற அடைவுகள் எவை?
Yoharajan Srivaratharajan