முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசிங்க பண்டார கைது

0
111

ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசிங்க பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

அரலகன்வில – கலுகள பகுதியில் வேறொரு கட்சியின் ஆதரவாளர் மீது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதலுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மகனுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் தெய்யத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசிங்க பண்டாரவை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.