மெர்சல் படத்துக்கு விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்

0
101
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாஜகவினரின்  எதிர்ப்புகளுக்கிடையே ஓடிக்  கொண்டிருக்கின்றன. படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்தது. இப்படத்தில் ஆளப்போறான்  தமிழன் பாடல் மிக ரசிகர்களிடையே பெரிதும் புகழ் பெற்றது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள்  கிடைத்துள்ளது. இதில் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா கோசலுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.