யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

0
77

யாழ்ப்பாண மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கவனம் செலுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக தேடி அறிவதற்காக பிரதி சபாநாயகரும், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவருமான திலங்க சுமதிப்பால நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அவருடன் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோவும் இணைந்து கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கிரிக்கெட் பயிற்சிக்கும் தேவையான மைதானத்தையும் நிர்மாணிக்க தீர்மாளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணித்த பின்னர், வடக்கில் சரியான பயிற்சிகள் வழங்கி, கிரிக்கெட்டு வீரர்களை தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.