விடுதலைப் புலிகளின் வீட்டில் வாழும் ஆறு குழந்தைகளின் தாயின் கவலை

0
114

இறுதி யுத்தத்திற்கு பின்னர் மீள் குடியேறியவர்களில், சந்திரகுமார் தேவகி என்ற ஆறு பிள்ளைகளின் தாயார், தனக்கு இதுவரை வாழ்வாதார உதவிகளோ, வீட்டுத்திட்டமோ கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் கட்டிவைத்த வீடு ஒன்றில் தற்பொழுது தாம் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் குறித்த தாய் கருத்து தெரிவிக்கையில்.

2011ஆம் ஆண்டு புதுகுடியிருப்பு – கைவேலி பகுதியில் மீள்குடியேறிய எனது குடும்பத்திற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித உதவியும் வழங்கவில்லை.

எனக்கு 6 பிள்ளைகள் அவர்கள் அனைவரும் சிறுவர்கள். என்னுடைய கணவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகள் கட்டிவைத்த வீடு ஒன்றில் தற்பொழுது நான் வசித்து வருகின்றேன்.

இந்த நிலையில் எனது குடும்பப்பதிவை மேற்கொள்ள கைவேலி இரண்டாம் வட்டார கிராம சேவையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எனக்கு கைவேலி முதலாம் வட்டாரத்தில் காணி வழங்குவதாக அந்த பகுதி கிராம சேவையாளர் தெரிவித்ததற்கு அமைய எனது பதிவை நான் அங்கு மேற்கொண்டுள்ளேன்.

எனினும் சொந்தகாணி நிரந்தரவீடு மற்றும் வாழ்வாதாரம் எதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணத்தினால் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் எனது குடும்பம் தவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

-lankasri