ஹட்டனில் பிரதமர் தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

0
96

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (28) காலை 11 மணிக்கு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், கே.கே. பியதாஸ, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.