ஹொரன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

0
100

ஹொரன – மத்துகம வீதியில் உள்ள அகல் ஓயா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை புளத்சிங்கல மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் புளத்சிங்கல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

டிராக்டரின் ஓட்டுனர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளத்சிங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்