அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

0
108

அம்பகமுவ பிரதேச சபையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிகப்பட்டுள்ளது.

சிசிர டீ அப்ரு, கே.டி. சித்ரசிறி, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினாலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.

அம்பகமுவ பிரதேச சபையை அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய மூன்று சபைகளாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் பிரிக்கப்பட்டதை ஆட்சேபித்தே அம்பேகமுவ, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எச்.டி. நந்தராஜினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.