அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்

0
101

நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுழற்சி முறையிலான பணிபகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.