கடகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
150
கடகம்
கடகம்

சுதந்திர மனப்பான்மையுடன், சுய ஒழுக்கமும் உள்ளவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சூரியன் 7-ம் வீட்டில் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்துப் போகும். மற்றபடி அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாகயிருப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படுவீர்கள். சகோதரங்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்துக் கொள்வார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் விலகும். குரு சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன், சாட்சி கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். அருகிலிருப்பவர்களை அனுசரித்துப் போக வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 4 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு