கன்னி (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
150
கன்னி
கன்னி

எப்பொழுதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரப் பதவில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வேற்றுமதத்தவர், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வேற்றுமதம், மொழி, இனந்தவரால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்து கைக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்ப்புகளின்றி உழைக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 31 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, கிரே அதிஷ்ட திசை: தெற்கு