கும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)

0
409
கும்பம்
கும்பம்

காலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பொன் வைக்குமிடத்தில் பூவைப்பது போல தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் வீண் விரையம், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு வலுவாக அமர்ந்திருப்பதால் சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் பணம் தரும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். காதல் கைக்கூடும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பற்று வரவு உயரும். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். வளைந்துக் கொடுத்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 1, 2 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு