சிம்மம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
176
சிம்மம்
சிம்மம்

எதிரிகளும் பாராட்டும் செயல்திறன் கொண்டவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். பணபலம் உயரும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். தந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். புதன் 6-ல் மறைந்து நிற்பதால் உறவினர், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். கழுத்து மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் வந்துப் போகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சனி 5-ல் தொடர்வதாலும், குருவும் சாதகமாக இல்லாததால் எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் போகும். சில நேரங்களில் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டி வரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்து, நெளிந்து பயணிக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு