தனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
282
தனுசு
தனுசு

பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே! 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக் கூறுவார்கள். மூக்குக் கண்ணாடி மாற்றுவீர்கள். பல் வலி சரியாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். சுக்ரன் வலுவாக அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். செவ்வாய் 12-ம் வீட்டில் நிற்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, மனை வாங்க லோன் கிடைக்கும். சாதுக்களின் ஆசிர்வாதம் பெறுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். ஏழரைச் சனி இருப்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். கனவுத் தொல்லை அதிகமாகும். கன்னிப் பெண்களே! தோற்றப் பொலிவுக் கூடும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களிடம் கவனமாக பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். தட்டுத் தடுமாறி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஊதா அதிஷ்ட திசை: தென்கிழக்கு