தலைமன்னாரில் 7 கோடி ரூபா மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது

0
103

தலைமன்னார் – ஊருமலை பகுதியில் 12 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

100 கிராம் அளவிலான 120 தங்க பிஸ்கட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தங்கத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் யாழ். சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.