துலாம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
181
துலாம்
துலாம்

அலட்டிக் கொள்ளாமல் அதிகாரம் செய்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளை தீர்க்க வழி கிடைக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். ஜென்ம குரு தொடர்வதால் எதிலும் நம்பிக்கையின்மை, வீண் கவலைகள், ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். ஆன்மிகப் பெரியோரிகளை சந்திப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உயரதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 1, 3 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மயில்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு