மகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
306
மகரம்
மகரம்

சுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். கல்யாணம் கூடி வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால் இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். தவறை தவறென்று சொல்லாமல் இப்படி செய்தால் நன்றாக இருந்திருக்கும். மறப்போம் மன்னிப்போம் என இருப்பது நல்லது. யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணம் வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். கன்னிப் பெண்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். ஆழம் அறிந்து காலை விட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 31 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு