மிதுனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
162
மிதுனம்
மிதுனம்

எறும்பைப் போல் சுறுசுறுப்பாய் இயங்குபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிதாக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் இனந்தெரியாத கவலைகள், வேலைச்சுமை வந்துச் செல்லும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், வீண் டென்ஷன், மனஇறுக்கம் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புது பங்குதாரர் இணைவார். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 2, 3 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: வடகிழக்கு