மீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
441
மீனம்
மீனம்

அருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தந்தைவழி சொத்து பங்கை கேட்டு வாங்கவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், செல்போன் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தை புரிந்துக் கொள்வார்கள். புது நட்பு மலரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வழக்கில் வழக்கறிஞரை கலந்தலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். குரு 6-ல் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 4 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடக்கு