மேஷம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
162
மேஷம்
மேஷம்

புது யுகம் படைக்க ஓயாமல் போராடுபவர்களே! உங்கள் பூர்வபுண்யாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு உண்டு. வீடு கட்ட பூமி பூஜைப் போடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால் அடுக்கடுக்காக செலவுகள், ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலைச்சுமை, சில நேரங்களில் தூக்கமின்மை வந்துச் செல்லும். பழைய பிரச்னைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று அஞ்சுவீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 4 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு