ரிஷபம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
173
மகரம்
மகரம்

தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்தவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்ட அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டிட வரை படத்திற்கு முறைப்படி அனுமதி கிடைக்கும். முகப்பரு சரியாகும். தோற்றப் பொலிவுக் கூடும். ஆனாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு வீராவேசத்துடன் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் மனைவிவழியில் உதவி உண்டு. சகோதரருக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். உயர்கல்வியில் நாட்டம் கூடும். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால் தந்தையாருடன் விவாதம் வரும். சேமிப்புகள் கரையும். ராகு வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வேற்றுமதத்தவர் நண்பர்களாவார். குரு 6-ல் நீடிப்பதால் சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. ஆடை அணிகலன்கள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் எதிர்த்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் அறியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 1, 2 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு