விருச்சிகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

0
163
விருச்சிகம்
விருச்சிகம்

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பழுதான மின், மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க வேலைகள் உடனே முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டு பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். ஏழரைச் சனி தொடர்வதால் கொஞ்சம் மனதில் கலக்கமும், சின்ன சின்ன ஏமாற்றங்களும் வந்த வண்ணமிருக்கும். யாருக்காகவும் ஜாமீன், காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். அனாவசியமாக யாரையும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது நல்லது. குரு சாதகமாக இல்லாததால் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் நட்பு வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் வளைந்து கொடுத்து நிமிர்வீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதரங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 4 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு