நீர்வழங்கல் சபையின் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

0
147

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேல்மாகாணத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று அரைநாள் வேலைநிறுத்தமொன்றில் ஈடுபடவுள்ளனர்.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கொரு முறை வழங்கப்படும் சம்பள உயர்வுக்கான கால எல்லை தாண்டியும் இதுவரை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே குறித்த சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கடந்த ஆறுமாதகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடன் கலந்தாலோசனையொன்றை மேற்கொள்ள நீர்வழங்கல் சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கடந்த ஒருவருட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் அதற்கும் நேரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நீர்வழங்கல் சபையின் மேல்மாகாணத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று அரைநாள் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் தமக்கான ஊதிய உயர்வு வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் சில நாட்களுக்குள்ளாக தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.