பிணைமுறி அறிக்கை மீது பெப்ரவரி 06ம் திகதி பாராளுமன்ற விவாதம்

0
99

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

அதன்படி பெப்ரவரி மாதம் 06ம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான அறிக்கைகள் தொடர்பில் இதன்போது விவாதம் நடத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, குறித்த அறிக்கைகள் மீது பாராளுமன்ற விவாதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 06ம் திகதி பாரளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் கூறியுள்ளார்.