மஹிந்தவுக்கு கணக்கு பிழைத்தது போல எனக்கு பிழைக்காது!– மைத்திரி

0
93

2015 ஜனவரி 8ல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கணக்கு தவறியது போல தமக்கு தவறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த 10 ஆண்டுகளில 3 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்;பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் நான்குறிப்பிட்டிருந்தேன்.

அவற்றுள் ஒரு ட்ரில்லியனுக்கே புத்தகங்களில் கணக்கு உள்ளதாகவும், ஏனையவற்றுக்கு என்னநடந்தது என்று தெரிவில்லை.

இவற்றை ரூபாய்களாகவே நான் குறிப்பிட்டிருந்தேன்.ஆனால், மூன்று ட்ல்லியன் அமெரிக்க டொலர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என மஹிந்தராஜபக்ஷ கூறியுள்ளார்.

பொருளாதார நிபுணர்களைக் கொண்டு ஆராயந்து இந்த விடயத்தை நான் தெளிவாககுறிப்பிட்டேன்.

அதனால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2015 ஜனவரி 8ல் கணக்கு தவறியது போல எனக்கு கணக்கு தவறாதுஎன்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.