மைத்திரி ஒரு திருடன்! அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு? – நாமல் ராஜபக்ஷ

0
91

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு உள்ளதனை எப்படி மறந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் திருடன் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு திருடன் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு அரசியல்வாதி தான். ஜனாதிபதிக்கு இலங்கையில் அல்ல அவுஸ்திரேலியாவில் இலஞ்ச ஊழல் வழக்கு உள்ளது. இலங்கை வரலாற்றில் சர்வதேச வழக்கு உள்ள ஒரே தலைவர் அவராகும்.

எனக்கு ரகர் விளையாட பணம் பெற்றுக் கொடுத்த வழக்கும், மஹிந்தவுக்கு தொலைகாட்சி விளம்பர வழக்குமே உள்ளது. உங்களுக்கு இருப்பது இலஞ்ச ஊழல் என்பதனை மறந்து விடாதீர்கள்.

அரசியல்வாதிகள் திருடன் என ஒரு விரலை நீட்டினால் நான்கு விரல்கள் உங்களுக்கு எதிராக நீட்டப்படும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடாதீர்கள் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Lankasri