இலங்கை மத்திய வங்கியினால் நாணயத்தாள்கயிடப்பட்ட புதிய 1000 ரூபா நாணயத்தாள்கள்

0
103

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய 1000 ரூபா நாணயத்தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை உத்தியோகப்பூர்வமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று (30) கையளித்தார்.

இந்நாணயத்தாளின் சிறப்பம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளதாவது,

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

S70 / 1 000001 – S70 / 5 1000000 என்ற தொடர் இலக்கங்களை கொண்ட 5 மில்லியன் நாணயத்தாள்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளியிடப்படும் தினத்தில் மாத்திரம் விஷேடமான முறையில் கவர்ச்சிகரமாக பொதி செய்யப்பட்டு ஒவ்வொரு ஆயிரம் ரூபா நாணயத்தாளும் 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நாணயத்தாள் பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது