டெல்லி மற்றும் காஷ்மீரில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

0
101
கஜகஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின், தாக்கம் பாகிஸ்தான், இந்திய எல்லையான காஷ்மீர் மற்றும் டெல்லியிலும் எதிரொலித்தது. 
டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கட்டிடங்களும், வீடுகளும் லேசாக அதிர்ந்தன. நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் சிறிது நேரத்தில் நிலைமை சீரானது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்திய தலைநகர் டெல்லி, காஷ்மீர் மற்றும் பல பகுதிகளில் உணரப்பட்டது. 6.2 ரிக்டரளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.