மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

0
92

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளின் பிரஜா உரிமையை, தற்போதிருக்கின்ற சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டாவது நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு இலஞச் ஊழல் சட்டதின் கீழ் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன் 07 வருட காலத்துக்கு குற்றவாளியாக இணங்காணப்பட்டால், அந்த 07 வருட காலத்துக்கு பிரஜா உரிமை இல்லாமல் போகும் என்றும், ஆகவே அவர்களால் 07 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.