மஹிந்த ராஜபக்‌ஷ நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை கூறும் ஜனாதிபதி

0
100

தனிக் குடும்பம் ஒன்றினால் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களிடம் இடம் கிடைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி, அன்றைய அரசாங்கம் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணம் ஊழல், மோசடிகள் போன்றே குடும்ப ஆட்சியே என்று அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் காலை உணவின் போது ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மாத்திரம் ஒன்று கூடுவார்கள்.

அவ்வாறு புதன்கிழமைகளில் தனியாக ஒன்று கூடும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தான் அரசின் கொள்கைகளை திட்டமிடுவார்கள். பொருளாதார திட்டமிடல்களை வகுப்பார்கள். நியமனங்கள் வழங்குவது குறித்து தீர்மானிப்பார்கள்.

அவ்வாறான ஒரு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காகவே புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.