150 வருடங்களுக்குப் பின் நிகழும் பூர்ண சந்திர கிரகணம்! தவறியேனும் இதை செய்துவிடாதீர்கள்

0
153

பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இரு திவ்ய நேத்ரங்களில் ஒருவரகாவும், நவக்கிரகங்களில் மனோகாரகர் என போற்றப்படும் சந்திரனுக்கு நாளை பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் பூர்ண சந்திரகிரகணம் நாளை வரவுள்ளது. மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த தினத்தில் சமுத்திரத்தில் குளித்தல் என்பது சிற்றபான விடயமாகும்.

இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும்.

குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

இந்த தினத்தில் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது என குறிப்பிடப்படுகின்றது.

கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம்.

பிறந்த ஜாதகப்படி சந்திர திசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.

சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

இரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.