லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு

0
108

லிபியாவின் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஐரோப்பாவுக்கு அகதிகளாக சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் 90 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஐ.நா.சபை அகதிகளுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா ஹீடன் தெரிவித்தார்.

லிபியாவின் ஜூவாரா கடல் பகுதியில் 10 சடலங்கள் ஒதுங்கின. இவற்றில் 8 பேர் பாகிஸ்தானையும் 2 பேர் லிபியாவையும் சேர்ந்தவர்கள். அதிக எண்ணிக்கையில் ஆட்கள் இருந்ததால் படகு கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா, இத்தாலிக்கு கடல் மார்க்கமாக லிபியா வழியே சட்ட விரோதமாக செல்பவர்களில் சமீபகாலமாக பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஹீடன் தெரிவித்தார்.